Life of Pi ,Slumdog Millionaire , Inferno போன்ற ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான், தான் neuroendocrine tumour என்னும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள இர்ஃபான் கான், தனக்கு இந்த நோய் வந்துள்ளது என்பதை அறிவதற்கு கடினமாகத்தான் உள்ளது எனவும், இருந்தாலும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் அன்பும் தனது மனோதிடமும் நம்பிக்கையளிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நோய்க்கான சிகிச்சைக்காக தான் வெளி நாடு செல்வதாகவும் தொடர்ந்து தங்கள் ஆதரவைத் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். என்னுடைய வார்த்தைகளுக்காக காத்திருந்தவர்களுக்கு நான் கூறும் செய்தி, ”மீண்டு வருவேன், புதிய கதைகளுடன் மீண்டும் வருவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
neuroendocrine tumour என்பது ஹார்மோன்களை உருவாக்கும் செல்களைத் தாக்கும் நோயாகும். இந்நோய் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டுவிட்டால் குணப்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்