பிரபல தொலைக்காட்சி மூலம் தன் வருங்கால மனைவியை தேர்தெடுக்க எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் நடிகர் ஆர்யா. இதற்காக பல பெண்கள் போட்டிபோட 16 பெண்களை நிகழ்ச்சி குழு தேர்தெடுத்திருந்தது.
இந்நிலையில் சில போட்டியாளர்கள் வெளியேறினாலும் நிகழ்ச்சியில் இன்னும் இருக்கின்ற இளம்பெண்கள் ஆர்யாவை எப்படியாவது கவர வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளார்கள்.
தற்போது சீத்தாலட்சுமி என்ற இளம்பெண் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒன்றை ஆர்யாவிடம் கூறியுள்ளார்.
அவர் கூறியது, ‘நான் என் பெற்றோருக்கு தாமதமாக பிறந்த பெண்குழந்தை, 8 வயது இடைவெளியில் நான் என் சகோதரருக்கு அடுத்து பிறந்துள்ளேன். நான் 12 வகுப்பு படிக்கும்போது என்னுடன் ஒரு பெண் தோழி இருந்தால், அவள் என்னுடன் தவறாக நடக்க முற்பட்டால், இதனால் நான் மிகவும் மனமுடைந்து மன அழுத்தத்தில் இருந்தேன். அப்போது இதைப்பற்றி என் குடும்பத்தினரிடம் சொல்ல சிரமப்பட்டேன்’. இதை கேட்ட ஆர்யா என்ன சொல்வதென்று புரியாமல் இருந்துள்ளார்.