சிறுநீரக செயலிழப்புக்கு காரணம்?

நமது தவறான உணவுப்பழக்க வழக்கமே சிறுநீரகம் விரைவில் பழுவடைவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

இன்றைய காலகட்டத்தில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, இதில் பெரும்பாலும் 30 வயதிற்கு கீழ் உள்ளவர்களே பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் சர்க்கரை நோய் ஆகும். கைக்குத்தல் அரிசியை விடுத்து, தீட்டப்பட்ட அரிசியையே நாம் உணவாக உண்கிறோம்.

இந்த அரிசியானது, சர்க்கரையை கட்டுப்படுத்தும் பல்வேறு சத்துக்களும் நீக்கப்பட்டது ஆகும்.

இதனாலேயே உடலில் சர்க்கரை அளவு உயருகிறது. எனவே, கைக்குத்தல் அரிசியையும், சிறுதானியங்களையும் உண்டால் சர்க்கரை பாதிப்பு குறைந்து, அதன் மூலம் ஏற்படும் சிறுநீரக பாதிப்பும் கட்டுப்படுத்தப்படும்.

சிறுநீரகப் பிரச்சனைக்கு இன்னொரு முக்கிய காரணம் உப்பு. பொதுவாக கடலில் இருந்து நேரடியாக எடுக்கப்படும் உப்பில் மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்திருக்கும். இவை உடலுக்கு மிகவும் தேவையான சத்துக்கள் ஆகும்.

ஆனால், வெண்மை நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, polish செய்யப்படும் உப்பில் இருப்பது வெறும் சோடியம் குளோரைடு மட்டுமே. இதனால் உடலுக்கு எந்தவித சத்துக்கள் கிடைக்காது.

மேலும், சிறுநீரகம் பழுதடையும். எனவே, தீட்டப்படாத பழுப்பு நிறத்திலான கல் உப்பை பயன்படுத்த வேண்டும்.

முந்தைய காலத்தில் மக்கள் கரும்புச்சர்க்கரையை பயன்படுத்தி வந்தனர். இது உடலுக்கு நன்மை தரும்.

ஆனால், இன்று சர்க்கரையில் உள்ள சத்துக்களை நீக்கிவிட்டு சீனியாக விற்கப்படுகிறது. இது சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்த வேண்டும்.

தற்போது சந்தையில் கிடைப்பவை தாவர எண்ணெய் வகைகள் ஆகும். இவற்றாலும் சிறுநீரகத்திற்கு பாதிப்பு உண்டாகும்.

எனவே, நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால் சிறுநீரகத்துடன், இதயமும் வலுபெறும்.