இலவங்கப் பட்டை என்பது சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருளாகும். இவை உடல் எடையை குறைப்பதற்கு மட்டும் பயன்படுவதோடு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
இதன் ஆரோக்கிய நன்மைகளால் இவை மருத்துவ மற்றும் அழகு பராமரிப்புகளில் பெரிதும் பயன்படுகிறது.
இதிலுள்ள அரோமேட்டிக் பொருட்கள் சமைக்கின்ற உணவுகளில் சுவையை சேர்ப்பதோடு, நல்ல நறுமணத்தையும் கமழச் செய்கிறது.
பிரியாணி போன்ற உணவுகளில் முக்கிய மசாலா பொருளாக இது உள்ளது. நாம் பண்டிகைகளின் போது தயாரிக்கும் இனிப்பு மற்றும் பலகாரங்களிலும் இதன் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில் பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம், மக்னீசியம், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.
இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் நமது இரத்த அழுத்தத்தையும், இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது. மேலும் கருவுற்ற காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும், சுவாச பிரச்சனை மற்றும் ஜீரண பிரச்சனை போன்றவற்றிற்கு மருந்தாகவும் செயல்படுகிறது.
தேச தாவிரயியல் மையம் மேற்கொண்ட ஆராய்ச்சி படி பார்த்தால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த பட்டை தண்ணீரை குடிப்பதன் மூலம், அப்போது ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கு பட்டையில் உள்ள அனல்கெஸிக்(வலி நிவாரணி பொருட்கள் ) மற்றும் இரத்த உறைதலுக்கான எதிர்ப்பு பொருள் போன்றவை மாதவிடாய் வலியையும் அதிகப்படியான இரத்தம் வெளியேறுவதையும் தடுக்கிறது.