பிரித்தானியாவில் வாழ சிறந்த இடங்களுக்கான தரவரிசைப்பட்டியலில் யார்க் நகரம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
பிரபல ஆங்கில நாளிதழான The Sunday Times பிரித்தானியாவில் வாழ்வதற்கு சிறந்த இடங்கள் எது என்பது குறித்து தரவரிசை வெளியிட்டுள்ளது.
அதில், North Yorkshire-ல் இருக்கும் York அதன் பழங்கால அழகு மற்றும் சமீபத்திய நவீனமாயக்கல் ஆகியவற்றின் காரணமாக முதலிடம் பிடித்துள்ளது.
York ஒரு சிறிய மாநகரமாக காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இங்கு நவநாகரீக உணவகங்கள், புதுமையான தொழில் நுட்பங்கள் போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் இங்கு வேலைவாய்ப்பு, பள்ளிகள், இணையத்தின் வேகம், கலாச்சாரம், உள்ளூர் கடைகள் ஆகியவைகளும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இங்கிருக்கும் பழமையான கட்டிடங்கள் மற்றும் வளைந்து வளைந்து செல்லும் ஆறுகள் போன்றவைகளும் இந்த நகரத்தில் வாழ்வதற்கு மக்களை சுண்டி இழுக்கிறது.
தற்போது பிரித்தானியாவில் வாழ்வதற்கு சிறந்த நகரமாக பார்க்கப்படும் இந்த நகரம் கடந்த காலங்களில் ஏன் சிறந்த நகரமாக வரவில்லை என்பதற்கான காரணத்தையும் அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அதாவது கடந்த 2000 ஆண்டுகளாக பழமையான நகரமாக இருந்ததால், இதைப் பற்றி யாரும் பேசவில்லை. ஆனால் தற்போது இங்கு வந்து அனைத்தையும் பார்த்த போது தான் தெரிகிறது, இது ஒரு அழகிய மாநகரமாக காணப்படுகிறது, பிரித்தானியாவிலே அதிவேக இணையதள சேவை இங்கே தான் கிடைக்கிறது.
இது நிச்சயமாக பிரித்தானியாவில் மக்கள் வாழ்வதற்கு சிறந்த நகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளதுடன், இங்கிருக்கும் வீட்டின் விலை £301,320 எனவும், மக்கள் தொகை 200,000 என்றும் தெரிவித்துள்ளது.
ஆண்டு தோறும் வெளியிடப்படும் தரவரிசைப்பட்டியலில் 2018-ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் வாழ்வதற்கு சிறந்த நகரங்களுக்கான தரவரிசையில் யார்க் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.