அமெரிக்காவில் மனைவியை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்த கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் Thousand Oaks நகரில் பிரபல வணிக வளாக ஒன்று உள்ளது. இந்த வணிக வளாகத்தில் விவாகரத்து ஆன முன்னாள் மனைவியை பார்ப்பதற்கு அவரது கணவர் வந்துள்ளார்.
அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த கணவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கி சுட்டார்.
இதனால் அவர் அந்த இடத்திலே பரிதாபமாக இறந்தார். அதன் பின் வணிக வளாக கடைகளில் இருந்தவர்கள் அவரை நோக்கி ஓடி வந்த போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
பலத்த காயமடைந்த அவரை பொலிசார் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், சற்று குணமடைந்த பின்னரே அவரிடம் இது குறித்து விசாரணை மேற்கொள்ள முடியும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.