சிலிண்டர் வெடித்து தாயும் மகள்களும் பலி!!

இந்தியாவின் தமிழ் நாட்டில், ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வீட்டில் எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகம்  ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள தயிர்பாளையம் பகுதியை சேர்ந்த 45 வயதான ஜெயமணிக்கு தனுஷ்யா, பவித்ரா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.அவரது கணவர் வீட்டிற்கருகில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை பாரத்து வருகிறார்.

இந்நிலையில், ஜெயமணி வீட்டில் இன்று காலை திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது.அயலவர்கள் மூலம் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஜெயமணியையும் அவரது இரு மகள்களையும் கழிவறையிலிருந்து சடலமாக மீட்டுள்ளனர்.

சிலிண்டர் வெடித்தபோது ஜெயமணியின் கணவர் வீட்டில் இல்லாத காரணத்தால் இது கொலையா? அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.