கழுத்தை அறுத்து தற்கொலை செய்த இளைஞன்!!

வவுனியாவில் இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பண்டாரிக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இவவுனியா, பண்டாரிக்குளம், மில் வீதி பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த மூன்று தினங்களாக குழப்ப நிலையில் இருந்த குறித்த இளைஞர், இன்று தனது கழுத்தினை கத்தியால் அறுத்துள்ளார்.உடனடியாகவே வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார்.36 வயதுடைய சி.தங்கரூபன் என்ற இளைஞரே அவ்வாறு உயிரிழந்தவராவார்.

இது தொடர்பான விசாரணைகளை பண்டாரிக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.காதல் விவகாரமே இத் தற்கொலைக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.