ஏழரை சனி பிடித்தால் எல்லோருக்கும் கெடுதலை செய்யாது. நல்லவர்களுக்கு சோதனையை கொடுத்தாலும் இறுதியில் நன்மையே செய்வார் சனிபகவான். சனிபகவான் நீதி தேவர், நியாயவான் என்று கூறியிருக்கிறோம்.
இவரிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி பிடித்தே தீரும்.இந்த சனி பெயர்ச்சியால் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பாதசனி. தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்மசனி. மகரம் ராசிக்காரர்களுக்கு விரயச்சனியாக தொடங்குகிறது.
ஜாதகரின் ஜன்ம ராசிக்கு பன்னிரெண்டாவது ராசி, ஜன்ம ராசி, ஜன்மராசிக்கு இரண்டாவது ராசி ஆகிய ராசிகளில் சனி சஞ்சரிக்கும் பொழுது ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் என்ற கணக்கில் ஏழரை சனி என்று அழைக்கப்படுகிறது.
யாருக்கு ஏழரை சனி:
ஒருவரின் ராசிக்கு 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச் சனியின் முதல் கட்டம் ஆரம்பமாகின்றது. அங்கு இரண்டரை வருடம் சஞ்சரிக்கும் சனியை ‘விரயச் சனி’ எனவும். அடுத்து ஜென்ம ராசியில் இரண்டரை வருடம் 2ஆம் கட்டமாக சஞ்சரிக்கும் சனியை ‘ஜென்மச் சனி’ என அழைப்பர்.ராசிக்கு 2ஆமிடத்தில் சனி சஞ்சரிக்கும் இரண்டரை ஆண்டு கால கட்டத்தை ‘பாதச் சனி’ என்றும் அழைக்கிறார்கள்.நன்மை செய்வார்.
விருச்சிக ராசிக்கு இதுநாள் வரை ஜென்ம சனியாக இருந்தவர் இனி இரண்டரை ஆண்டுகாலம் பாத சனியாக மாறுகிறார். இன்னல்கள் நிறைந்த கால கட்டமாக இருந்தது. எங்குமே துன்பங்கள் நிறைந்த கால கட்டமாக இருந்தது.
ஜென்மசனி கால கட்டத்தில் பல்வேறு இன்னல்களை அனுபவித்து விட்டீர்கள்.ஏழரை முடியும் போது பலவித நல்ல பலன்களை கொடுத்து விட்டு செல்வார் சனிபகவான்.
வெற்றி கிடைக்கும்:தனுசு ராசிக்கு ஜென்மத்தில் அமர்கிறார் சனிபகவான். ஏழரை சனியின் இரண்டாவது கால கட்டமாகும். விரைய சனியாக இருந்த சனிபகவான் ஜென்மசனியாக தொடர்கிறார்.
11வது இடத்தில் இருக்கும் குரு பகவானில் நன்மையே கிடைக்கும்.தைரிய ஸ்தானதிபதி சனிபகவான் உங்கள் ராசிக்கு வந்திருக்கிறார். எனவே பயம் வேண்டாம். தனுசு ராசிக்காரர்கள் வெற்றியை நோக்கி பயணிக்கப் போகிறீர்கள். அதே நேரத்தில் செலவுகள் அதிகரிக்கும்.
சுபவிரயம் ஏற்படும்:
சனிபகவான் 12வது இடத்தில் விரைய சனியாக அமைகிறார். ஏழரை சனி ஆரம்பிக்கிறது. பயம் வேண்டாம். 12வது இடம் அயன சயன ஸ்தானத்தில் சனி அமர்வதால் ஏழரை ஆரம்பிக்கிறது. அடடா ஏழரை ஆரம்பிக்கிறதே என்று பயப்பட வேண்டாம். சனிபகவான் உங்கள் ராசிக்கு அதிபதி. அவர் நல்லதே செய்வார். தவறு செய்தால் மட்டுமே தண்டிப்பார்.
கெடுபலன்கள் குறையும்:ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான், மகரம் அல்லது கும்பத்தில் ஆட்சி பெற்றாலும், ஏழரை சனி கெடுதல் செய்யாது. காரணம் சனிபகவானின் ஆட்சி வீடு. மகரம் அல்லது கும்ப லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு சனியும் லக்னத்தில் இருந்தால் ஏழரை சனியும் கெடுதல் குறையும்.
ஜாதகத்தில் சனி உச்சம் பெற்று துலா ராசியில் இருந்தால் அது கேந்திரம் அல்லது திரிகோணம் என்று இருந்தால் அவருக்கு ஏழரை சனியால் கெடுதல் குறையும்.
குழந்தைகளுக்கு பாதிப்பு:
குழந்தைகளுக்கு ஏழரை சனி நடக்கும்போது தாய்க்கு உடல்நலம் பாதிப்பு, குழந்தை படும் சிரமத்தால் மனக்கவலை, தந்தைக்கு அதிக செலவுகள், குழந்தையால் உண்டாகும் செலவாகவும் இருக்கலாம்.
இக்காலகட்டத்தில் குழந்தைகளை அதிகம் கண்டிக்காமல் இருப்பது நல்லது. இல்லையேல் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள்.பரிகாரம்:
பத்து வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எனில் அதிக பிடிவாதம், படிப்பில் கவனம் குறையும் பள்ளியில் சேட்டை என பாடாய் படுத்தி விடுவார்கள். சிவன் கோயிலில் உள்ள நவகிரகங்களில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
எள் தீபம்:
சனிக்கிழமையன்று சனிபகவானுக்கு எள் தீபம் போடலாம். விநாயகர்,ஆஞ்சநேயரை வணங்கலாம். திருநள்ளாறு, குச்சனூர், திருக்கொள்ளிக்காடு உள்ளிட்ட ஆலயங்களில் சனிபகவானை வணங்கி கெடு பலன்களில் இருந்து தப்பிக்கலாம்.