தற்போது ஸ்மார்ட் தொலைபேசி பாவனையாளர்கள் மிகக் குறைவு என்பதே உண்மை அதாவது “உடுக்கை இழந்தவன் கை போல இடுக்கண் களையுமாம் ஸ்மார்ட் போன்” என்றும் கூட சில இணையப் புதுமொழிகள் உருவாகிவிட்டன.
இவ்வாறான ஸ்மார்ட் தொலைபேசிகளில் மிகப்பெரியதோர் குறைப்பாடு அதன் பேட்டரி அதிகமாக நீடிக்காத ஒன்றே.இந்த தொல்லைக்கு தீர்வாக ஸ்மார்ட் தொலைபேசியின் பேட்டரியை பாதுகாக்க சில வழிமுறைகள் உள்ளன அதனைக் கடைபிடித்தால் பேட்டரியின் ஆயுள் அதிகரிக்கும்.
தொலைபேசியை சார்ஜ் செய்யும் போது, சார்ஜ் வீதம் 100 வீதத்தை தொட்டவுடன் மின்னேற்றியில் (சார்ஜர்) இருந்து துண்டித்து விட வேண்டும். இல்லாவிடின் பேட்டரி பழுதடையும்.என்னதான் நீங்கள் சார்ஜ் ஏற்றினாலும் அளவுக்கு மீறினால் அது ஆபத்து. அதேபோல அடிக்கடி ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்வதனையும் விட்டுவிடவேண்டும்.
தொலைபேசியில் பேட்டரி நீங்கிவிட்டதாக அறிவித்தல் வரும் வரையில் காத்திருக்காமல் அதனை சார்ஜ் செய்து உபயோகிப்பது மிகவும் நல்லது.முற்று முழுதாக பேட்டரியின் பலன் தீர்ந்து விடும் வரையில் தொலைபேசியை பாவனை செய்வது பேட்டரிக்கு பாவனையாளர் கொடுக்கும் புற்றுநோய் அது படிப்படியாக பேட்டரியைக் கொன்று விடும்.
மிக முக்கியமாக தொலைபேசி சார்ஜ் செய்யும் போது அதிகளவில் சூடேறுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு சூடாகும் எனின் போனின் பின்பக்க உறையை நீக்கி சார்ஜ் செய்யவேண்டும்.சூரிய ஒளியில், அதிக சூட்டுக்கு அருகில் தொலைபேசியினை வைத்திருப்பதும் அதன் பட்டரி கூடிய விரைவில் இறந்து விடுவதற்கு ஓர் காரணம்.