இலங்கையின் கடற்பரப்பில் பாரிய சூறாவளி நிலைமை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி, தொடன்துவ பிரதேசத்திற்கு அருகில் உள்ள கடலில் நேற்று மாலை 5.45 மணியளவில் பாரிய சூறாவளி ஏற்பட்டுள்ளது.
இந்த டொனேடொ சூறாவளி ஏற்பட்டதனை தொடர்ந்து கடலில் இருந்து பாரிய நீராவி ஒன்று வானை நோக்கி சென்றுள்ளது.
இதனை அவதானித்த அந்த பிரதேச மக்கள் கடும் காற்று நிலைமை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் இவ்வாறான சூறாவளி ஒன்றை காலி பிரதேசத்தில் அவதானித்ததில்லை என குறிப்பிடப்படுகின்றது.