2014 ஆம் ஆண்டு, எம்.எச் 370 விமானம், கோலாலம்பூரில் இருந்து, பீஜிங் நோக்கி 293 பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்த போது மாயமானது. 1,046 நாட்களுக்கு பின்பு, மலேசியா மற்றும் சீனாவுடன் இணைந்து நடந்த தேடுதல் முயற்சி முற்றிலுமாக கைவிடப்பட்டது.
உலகளவில் நூற்றுக்கணக்கானோர் சிறப்பாக தேடுதல் முயற்சி செய்தும், விமானத்தை கண்டறிய முடியவில்லை.
விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே இந்த தேடுதல் பணிதான் மிகவும் பெரிய பரப்பளவிலும், ஆழ்கடலிலும் நடைபெற்றது.
இந்நிலையில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு மாயமான விமானம் குறித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பீட்டர் மோகன் என்ற மெகானிக்கல் என்ஜினியர் திடுக்கிடும் தகவல்களைக் கூறியுள்ளார்.
காணாமல் போன விமானங்களை தேடும் துறையில் ஆர்வமுள்ள பீட்டர், கூகுள் எர்த் மூலம் 2014ம் ஆண்டு மாயமான எம்எச்370ஐ கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளார்.
இவரின் ஆய்வு முடிவுகள்படி விமானம் மொரிஷியஷில் இருந்து 22.5 கிமீட்டர் தொலைவில் 16 கி.மீ தெற்கில் உள்ள ரவுண்ட் தீவை காட்டுகிறது. இந்தத் தீவில் இதுவரை விமானம் மாயமானது குறித்து தேடுதல் நடத்தப்பட வில்லை.