நடிகர் விக்ரம் விமானத்தில் பயணிப்பதை தெரிந்துக் கொண்ட பணிப் பெண்கள் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள்.
விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஸ்கெட்ச்’. விஜய் சந்தர் இயக்கிய இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் நடித்து வருகிறார்.
இதில் விக்ரமுடன், பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் விக்ரமுக்கும் விமான பணிப் பெண்கள் இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார்கள்.
விமானத்தில் விக்ரம் பயணிப்பதை அறிந்த பணிப் பெண்கள், அவருக்கு இந்த விமானத்தில் பயணிக்கும் மிகவும் திறமையான சூப்பர் ஸ்டார் வினோத் விக்ரமுக்கு நன்றி என்று வாழ்த்து கூறி இனிப்பு மற்றும் ஜூஸ் கொடுத்திருக்கிறார்கள்.
இதற்கு விக்ரம் நன்றி தெரிவித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.