விமல் வீரவங்சவை கைது செய்ய உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோரை கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணை ஒன்றில் குறித்த இருவரும் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீரவங்சவை உடனடியாக கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோரை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லால் பண்டார ரணசிங்க இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹூசைன் கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த போது அதனை எதிர்த்து மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரவங்ச, ஜயந்த சமரவீர உட்பட 7 பேருக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை.

இதனையடுத்தே அவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் வழக்கு விசாரணைகளை ஜூன் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.