இங்கிலாந்திலேயே இங்கு தான் வீடுகள் விலை குறைவு!

பிரித்தானியாவில் சராசரியாக ஒரு வீடு வாங்க வேண்டுமென்றால் 2 லட்சம் பவுண்டுகள் தேவை என்ற நிலையில் இங்கிலாந்தின் Verdun Terrace பகுதியில் 18,000 பவுண்டுகளுக்கு வீடுகள் கிடைக்கின்றன என்னும் செய்தி ஆச்சரியத்தையளிக்கின்றது.

ஆம், இங்கிலாந்தின் Verdun Terrace என்னும் பகுதியில் 18,000 பவுண்டுகளுக்குவீடுகள் கிடைக்கின்றன. Verdun Terrace பகுதி ஒரு மலைக்குமேல் அமைந்துள்ளது. இங்கு ஒரே போல் தோற்றமளிக்கும் வீடுகள் வரிசையாக அமைந்துள்ளன.

Durham பகுதியிலிருந்து ஆறு மைல் தெற்கே அமைந்துள்ள இந்த வீடுகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸிலேயே விலை குறைவான வீடுகள் ஆகும்.

59 ஆண்டுகளாக இதே பகுதியில் வசித்துவரும் Ronald Barton (88), இந்த வீடுகள் கட்டப்பட்டு சுமார் 100 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்றும், இதற்குப்பின்னர் கட்டப்பட்ட பல வீடுகள் இடிந்து போனதாகவும் கூறுகிறார்.

இங்கு ஒரே ஒரு பிரச்சினைதான், சாலை வசதி மட்டும் சரியில்லாததால் வாகனங்கள் வருவதில்லை, இந்த இடம் சரியில்லை என்று சொல்வீர்களென்றால் உங்களுக்கு நான் இதைவிட மோசமான இடங்களைக் காட்ட முடியும் என்கிறார் 74 வயதான John Cockerill.