உலகை முற்றாக மாற்றப் போகும் நிகழ்வுகள் – பெண் துறவி பாபா வாங்கா

ரஷ்யா தான் இனி உலகை ஆளும் என பல ஆண்டுகளுக்கு முன்னரே கணித்துள்ள பெண் துறவி பாபா வாங்கா, இந்த ஆண்டில் உலகையே மாற்றவிருக்கும் 2 நிகழ்வுகள் நடைபெறும் என கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்கேரியா நாட்டவரான பெண் துறவி பாபா வாங்கா இதுவரை கணித்துள்ள பெரும்பாலானவை நடந்துள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில்,

ரஷ்யாவே இனி உலகை ஆளும் எனவும், அது புடின் ஆட்சி காலத்தில் நடந்தேறும் எனவும் கணித்துள்ளார்.

ஆனால் அதற்கு ரஷ்யா பொறுமையுடன் தனது பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாபா வாங்கா குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி ரஷ்யா தொடர்பில் பாபா வாங்கா இதுவரை கணித்துள்ள 85 விழுக்காடும் நடந்தேறியுள்ளதாக ஆய்வாளார்கள் தெரிவிக்கின்றனர்.

2018-ல் உலகை முற்றாக மாற்றும் இரண்டாவது பாரிய நிகழ்வாக சீனாவின் ஆதிக்கம் இருக்கும் என பாபா வாங்கா கணித்துள்ளார்.

மட்டுமின்றி இதுவரை உலக வல்லரசாக வீறுநடை போடும் அமெரிக்கா வீழ்ச்சி அடையும் எனவும், அந்த இடத்தை சீனா கைப்பற்றும் எனவும் பாபா வாங்கா கணித்துள்ளார்.

உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பங்களிப்பானது 2015 ஆம் ஆண்டு 16.7 சதவிகிதமாக இருந்தது. அது 2025 ஆம் ஆண்டு 14.9 விழுக்காடு என சரிவை சந்திக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆனால் 1970 ஆம் ஆண்டு 4.1 விழுக்காடு என இருந்த சீனாவின் பொருளாதாரம் 2015 ஆம் ஆண்டு 15.6 என உயரும் எனவும் பாபா வாங்கா கணித்துள்ளார்.

மட்டுமின்றி எதிர்காலத்தில் ஐரோப்பாவை இஸ்லாமியர்கள் ஆட்சி செய்வார்கள் எனவும் பாபா வாங்கா கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.