அதிகுளிர் நிறைந்த அந்தாட்டிக்காவில் நீண்ட காலம் தங்கி சாதனை!

அந்தார்ட்டிக்காவில் 403 நாட்கள் தங்கி 56 வயது பெண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.அந்தார்ட்டிக்காவில் இந்தியா பாரதி என்ற ஆய்வு மையத்தை நிறுவியுள்ளது. இவ் ஆய்வு மையத்தில் பணிபுரிவதற்காக, 23 பேரை கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகளின் குழு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்றுள்ளது.

இதனடிப்படையில் 90 டிகிரி குளிரில் மங்கள மணி என்னும் பெண், 403 நாட்கள் தங்கியிருந்து, தற்போது இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். இதன் மூலம் அதிக நாட்கள் தங்கியிருந்த இஸ்ரோ பெண் விஞ்ஞானி என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.