இதை செய்தால் உங்க முடி உதிராது!

பெண்மை பருவம் அடைவதில் தொடங்கி மெனோபாஸ் வரும் காலம் வரை பெண்களின் உடலையும் அவளது இயக்கங்களையும் ஆட்டுவிக்கும் வல்லமை கொண்டது ஹார்மோன்கள்.

அதிலும் 40 வயதிற்கு பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால் சருமம் மற்றும் கூந்தலில் சில பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

எனவே அந்த சமயத்தில் கூந்தல் மற்றும் சருமப் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

முடியை பராமரிக்க என்ன செய்யலாம்?
  • நல்ல தரமான பெரிய பற்கள் கொண்ட சீப்பினை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அதனால் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு கூந்தல் பளபளப்பாகும்.
  • அடிக்கடி தலைக்கு குளிப்பதற்கு பதிலாக ட்ரை ஷாம்புக்களை வாங்கி ஸ்ப்ரே செய்தால் கூந்தல் தலைக்கு குளித்தது போலவே அடர்த்தியாக காணப்படும். அது ஸ்கால்ப்பில் பாதிக்காது.
  • அதிக நேரம் ஷவரில் நின்று தலைக்கு குளிக்கக் கூடாது. ஏனெனில் அதனால் கூந்தல் அதிகம் உடைந்து முடியின் வேர்கள் வலுவிழந்துவிடும்.
  • புரதச்சத்து மிக்க மீன், நட்ஸ், பீன்ஸ் மற்றும் ஜிங்க் சத்து மிக்க இறைச்சி, பீன்ஸ் அகியவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
  • இரும்புச்சத்து மிக்க கீரை, பேரிச்சம்பழம், உலர் பழங்கள் மற்றும் முட்டை, பெர்ரி பழங்கள் ஆகியவற்றில் கூந்தலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது.