பாட்டியை கீழே தள்ளிவிட்ட பேத்தி: அதிர வைக்கும் வீடியோ!

வயது முதிர்ந்த பெண்மனி ஒருவரை அவரது பேத்தியே செருப்பால் பயங்கரமாக தாக்கி கீழே தள்ளிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் தீபா(40). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தனது பாட்டி கல்யாணி(90) என்பவருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் தீபா செய்து வந்த வேலை பறிபோயுள்ளது. இதனால் வீட்டுச் செலவை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த தீபாவின் பாட்டிக்கு தீடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது மருத்துவ செலவும் செய்ய வேண்டி இருந்தது. பண பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து குடும்பத்துக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இது குறித்து அக்கம் பக்கத்து வீட்டார் சமாதானம் கூறியபோதிலும், தீபா அவர்களுடன் கடுமையாக வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, பாட்டி கல்யாணி வீட்டு வாசலில் அமர்ந்திருக்க, அப்போது அங்கு வந்த தீபா கல்யாணியை கடுமையாக விமர்சித்ததுடன் அவரை கையாலும், செருப்பாலும் அடித்து துன்புறுத்தியுள்ளார். அடி தாங்க முடியாமல் அவரின் பாடடி கல்யாணி அலறி துடித்துள்ளார்.

இதுமட்டுமல்லாது, பாட்டி போர்த்தயிருந்த போர்வையோடு அவரை தரதரவென இழுத்துச் சென்று கீழே தள்ளி, கடுமையாக தாக்கியுள்ளார். இந்த காட்சியை, சிலர் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர். பாட்டியைத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து, தீபாவை கைது செய்ய வலியுறத்தப்பட்டது.

இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு கண்ணூர் போலீசார், தீபாவை கைது செய்துள்ளனர். முதியவரைத் தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தீபா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தீபாவின் தாய், பாட்டி கல்யாணி ஆகியோரை அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.