புல்மோட்டை பகுதியில் 15 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே குறித்த இளைஞரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புல்மோட்டை, கமாஸ்நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் மூன்று வருடங்களாக சிறுமியை காதலித்து வந்த நிலையில், சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி குச்சவெளி வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.