பிறந்த குழந்தையை குழிதோண்டிப் புதைத்த கொடூரத் தாய்!

பிறந்த உடனேயே குழந்தையை புதைத்த தாய் ஒருவரை தம்புள்ளை பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

தம்புள்ளை, நிகவட்டவன பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 15ம் திகதி வீட்டில் வைத்து பிறந்த குழந்தையை குழிதோண்டிப்பு தைத்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிவதாகவும், சந்தேகநபரான பெண்ணுக்கு மேலும் இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட்ட பின்னர் இன்று மாலை குழந்தையின் சடலத்தை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.