பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தார்.இதில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ள நிலையில், அதில் 51 பேர் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதுடன், நான்கு பேர் ஸ்ரீலங்கா சுதந்தர கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 4 பேரும் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 51 இணைந்து குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் டி.பி.ஏகநாயக்க, நிஷாந்த முதுஹெட்டிகே, எஸ்.புஞ்சிநிலமே மற்றும் காதர் மஸ்தான் ஆகிய 4 பேரும் கையெழுத்திட்டுள்ளனர்.
நம்பிக்கையில்லா பிரேரணையை பெற்றுக்கொண்ட சபாநாயகர், அறிக்கையில் உள்ள விடயங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படுமென தெரிவித்துள்ளார்.