சாதாரணமாகப் பிள்ளைகள் சுட்டித்தனம் செய்யும் போது அவர்களுக்கு ஏதாவது காயம் நேருமோ என்று பெரியவர்கள் அஞ்சுவதுண்டு.பிள்ளைகள் ஆபத்தான செயல்களில் ஈடுபடும் போது உடனே அதைத் தடுத்து நிறுத்துவது பெரியவர்களின் இயல்பு.ஆனால், இந்தப் பிள்ளை மீண்டும் மீண்டும் விழுந்து எழுவதை 11 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் கண்டு இரசித்துள்ளனர்.சாதாரணமாகப் பிள்ளைகள் சுட்டித்தனம் செய்யும் போது அவர்களுக்கு ஏதாவது காயம் நேருமோ என்று பெரியவர்கள் அஞ்சுவதுண்டு.
பிள்ளைகள் ஆபத்தான செயல்களில் ஈடுபடும் போது உடனே அதைத் தடுத்து நிறுத்துவது பெரியவர்களின் இயல்பு.ஆனால், இந்தப் பிள்ளை மீண்டும் மீண்டும் விழுந்து எழுவதை 11 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் கண்டு இரசித்துள்ளனர்.காரணம், இந்தப் பிள்ளையின் இரசிக்கக்கூடிய விடாமுயற்சி. நாற்காலியின் மீது குதித்து ஏறி நிற்க வேண்டும். பிள்ளையின் ஒரே நோக்கம் இது.
ஒவ்வொரு முறை விழுந்தும் பிள்ளை முயற்சி செய்வதை நிறுத்தவில்லை. இறுதியில், அருகிலிருக்கும் ஆடவர் ஒருவர் பிள்ளையைப் பாராட்டி ஊக்குவித்து முத்தமிடுகிறார்.ஒரே மூச்சாக பிள்ளை குதிக்கிறாள்… வெற்றி அடைகிறாள்! பிள்ளையின் வெற்றிக் கூச்சல் மனத்தை நெகிழ வைக்கின்றது.