ஏன் கொலுசு அணிய வேண்டும் ?

நாகரீகம் என்ற பெயரில் சிலர் இந்த வழக்கங்களை முறையாக பழக்கத்தில் கொள்ளாமல் இருக்கிறனர். அதில் ஒன்றுதான் கொலுசு அணிவது.
நகைகள் என்றுமே நம் உடலில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடல் உறுப்புகளை பராமரிக்கிறன. ஆரம்பகாலத்தில் இந்த அணிகலன்களை அணிவது வழக்கத்தில் இருந்ததது. ஆனால் பின்னாளில் இந்த வழக்கத்திற்கான அர்த்தம் தெரியாமல் போக நம்மில் பலர் இந்த வழக்கத்தை கைவிட்டு விட்டோம்.ஆனால் நாகரீகம் என்ற பெயரில் சிலர் இந்த வழக்கங்களை முறையாக பழக்கத்தில் கொள்ளாமல் இருக்கிறனர். அதில் ஒன்றுதான் கொலுசு அணிவது.

கொலுசு அணிவது பெண்களுக்கு மிக முக்கியமான ஒன்று. பொதுவாகவே ஆண்களை விட பெண்களுக்கு உணர்ச்சிகள் அதிகம். இந்த உணர்ச்சிகளை கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுவதுதான் இந்த கொலுசு.

உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. காலில் அணியும் கொலுசு குதிகால் நரம்பில் உரசிக் கொண்டே இருப்பதால் மூளைக்குச் செல்லும் உணர்ச்சி அலைகளை இது கட்டுப்படுத்துகின்றது.மேலும் பெண்களின் இடுப்புப் பகுதியை சமநிலைப் படுத்தவும் இந்த கொலுசு அணியப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சிறு குழந்தைகளுக்கு இந்த கொலுசு அணிவதற்கு காரணம் அவர்களின் நடமாட்டைத்தை இந்த கொலுசின் ஒலி மூலம் பெரியவர்கள் கவனித்துக் கொள்வர்.

மேலும் நாம் தங்கத்திலான கொலுசு அணியாமல் ஏன் வெள்ளியிலான கொலுசை அணிகிறோம் என்பதற்கும் காரணம் உண்டு. வெள்ளி ஆயுளை விருத்தி செய்யும் ஒரு உலோகம். மேலும் வெள்ளியில் இருக்கும் காந்த சக்தி நரம்புகளில் சுலபமாக ஊடுருவி அதன் பணியை செவ்வனே செய்யும்.ஆக பெண்களே நீங்கள் அணிகலன் அணியும் போது அதன் அர்த்தம் என்ன என்பதை அறிந்து, புரிந்து அதன் பின் செயல்படுங்கள்!