மனித உடலுக்கு முக்கிய சத்துக்களுள் ஒன்று நார்ச்சத்து. உடல் எடை குறைக்க வேண்டுமென்று நினைப்பவர்களுககு உதவக்கூடிய ஒரு அற்புதமான சத்து.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியமானது. மேலும், நார்ச்சத்து உள்ள பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டாலே உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்களை கொடுக்கும். உடல் எடை குறைப்பிற்கு அதுவே பெரிதும் உதவும். இந்தக் கட்டுரையில் உடல் எடை குறைக்க நார்ச்சத்து எப்படி உதவும் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவுகளை சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது.
வாருங்கள் இப்போது உடல் எடை குறைப்பிற்கு உதவக்கூடிய சில நார்ச்சத்து நிறைந்த உணவுகளைப் பற்றி பார்ப்போம்…
எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் போது, நார்ச்சத்து நிறைந்த கேரட்டை சற்று அதிகம் சாப்பிட்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். மேலும் இது மற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டத்தையும் தடுக்கும்.