வடக்கில் அடுத்த மாதம் 13ஆம் 14ஆம் 15ஆம் திகதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அன்றைய நாள்களில் 36 பாகை செல்சியஸ் வரை வெப்பம் சுட்டெரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன் உச்சம் கொடுப்பது எதிர்வரும் 5ஆம் திகதி காலி மாவட்டத்தில் ஆரம்பிக்கிறது. மறுநாள் அளுத்கமவிலும், 7ஆம் திகதி மொரட்டுவையிலும் அதிகளவில் உச்சம் கொடுக்கிறது. அது அவ்வாறு நகர்ந்து எதிர்வரும் 13 ஆம்திகதி மதியம் 12.10 மணியளவில் மன்னாரில் சூரியன் உச்சம் கொடுக்கும். அன்று வழமையைவிட அங்கு அதிகரித்த வெப்பநிலை நிலவும்.
மறுநாள் கிளிநொச்சி, வட்டக்கச்சி ஆகிய இடங்களில் 12.10ற்க்கு உச்சம் கொடுக்கும். எதிர்வரும் 15 ஆம்திகதி மதியம் 12:10ற்க்கு வட்டுக்கோட்டை மற்றும் சுன்னாகம் ஊடாக கடல் பகுதிக்கு நகர்கிறது.
தற்போது 31க்கும் 32க்கும் இடைப்பட்ட அளவில் வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.