உடல் எடை அதிகரிப்பதால் பல்வேறு உடல்நலப்பிரச்சனைக்கு மனிதர்கள் ஆளாகிறார்கள். ஒழுக்கமற்ற உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாமை ஆகியவையே இதற்கு காரணமாகும்.
உடல் எடையால் அவதிப்படுபவர்கள், அன்றாட உணவுப்பழக்கங்களில் முறையாக கவனம் செலுத்தி வந்தாலே போதும் அந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்,
ரசிகா என்ற 24 வயது பெண் 90 கிலோ எடையால் அவதிப்பட்டுள்ளார், அவர் ஒன்றரை வருடத்தில் 35 கிலோ குறைத்தது எப்படி என்பது குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதிகமான உடல் எடையால் எனக்கு பிடித்தமான ஆடைகளை வாங்கி அணி முடியவில்லை, அதுமட்டுமின்றி எங்கு புறப்படுவதாக இருந்தாலும் உடல் எடை எனக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது.
இதனால், சிறந்த உடற்பயிற்சி மையத்தை தெரிவு செய்தேன், அதுமட்டுமின்றி உணவுபழங்களிலும் சில மாற்றங்களை கொண்டுவந்தேன்.
காலை உணவு: ஓட்ஸ் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் சேர்க்காத உணவுகள்
மதிய உணவு: பழுப்பு அரிசி, கோழி மற்றும் சில நேரங்களில், பன்னீர் மற்றும் மோர். மேலும், முளைகட்டிய தானியங்களை சாப்பிடுவேன்.
இரவு உணவு: தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக இரவு உணவினை சாப்பிட்டு விடுவேன், வேகவைத்த முட்டை, பருப்பு மற்றும் பழங்களை சாப்பிடுவேன்.
உடற்பயிற்சி: எடை பயிற்சி மற்றும் கார்டியோ ஆகிய இரண்டையும் தவறாமல் செய்துவிடுவேன். ஒடுதல் மற்றும் நீச்சலடிப்பதையும் மேற்கொண்டேன். இடைப்பட்ட நேரங்களில் காய்கறி சூப், ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோசு, முளைகள், மணி மிளகு மற்றும் சோளத்தை சேர்க்கவும். நீங்கள் விரும்பினால் வேகவைத்த கோழியை சாப்பிடலாம்.
இதனையும் தாண்டி காலையில் எழுந்தவுடன் மற்றும் இரவு தூங்க செல்வதற்கு முன்னர் ஒரு டம்ளர் சூடு தண்ணீரை குடியுங்கள்.