பல பெண்களை சீரழித்து வீடியோ எடுத்தேன்: ஜோதிடர் பரபரப்பு

தமிழ்நாட்டில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாகவும் எடுத்த ஜோதிடரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஸ்ரீ அருள் தவசி ஜோதிடாலயா என்ற பெயரில் ஜோதிடம் பார்த்து வந்தவர் பன்னீர் செல்வம்.

இந்நிலையில் மகளின் திருமணத்திற்கு ஜோதிடம் பார்ப்பதற்காக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி பன்னீரை அணுகியுள்ளனர்.

ஜாதகத்தைப் புரட்டிப் பார்த்த பன்னீர், பெண்ணுக்கு தோஷம் இருப்பதாகவும், அவரை நேரில் அழைத்து வந்தால் பரிகாரம் செய்து விடலாம் என்று கூறியுள்ளார்.

அதன்படி தங்களது 18 வயது மகளை பெற்றோர் அவரிடம் கூட்டி வந்த நிலையில், அவர்களிடம் இரண்டு மண் விளக்குகளை கொடுத்து பூஜை அறைக்கு வெளியில் காவலுக்கு நிற்க வைத்து விட்டு இளம்பெண்ணை மட்டும் அழைத்து கொண்டு பூஜை அறைக்குள் சென்று கதவை தாழிட்டுள்ளார்.

அங்கு வைத்து தோசம் கழிப்பதாக கூறி அந்த இளம்பெண்ணை சீண்டியுள்ளார்.

தனது விருப்பத்திற்கு ஒத்துழைக்காவிட்டால், மந்திர சக்தியால் தாய் தந்தையரை முடமாக்கி, அந்த பெண்ணையும் நடக்க முடியாதபடி செய்து விடுவேன் என்று கூறி மிரட்டி அந்த இளம் பெண்ணை பன்னீர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அறையில் பொறுத்தப்பட்டிருந்த ரகசிய கமெரா மூலம் தான் செய்யும் அத்துமீறல்களை வீடியோவாகவும் எடுத்துள்ளார்.

பின்னர் நடந்த அனைத்தையும் அந்த பெண் பெற்றோரிடம் கூற, உடனடியாக பன்னீர் செல்வத்தை பிடித்து அவர்கள் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தோசம் கழிப்பதாக கூறி தனது பூஜை அறைக்கு அருகில் இருக்கின்ற ரகசிய அறைக்கு அழைத்துச்சென்று பல பெண்களிடம் இதுபோன்று பாலியல் வன்கொடுமையிலும் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டதையும், 7 பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததையும் அவரே ஒப்புக்கொண்டு பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.