பென்சில்வேனியாவில், தனது 45 வயது காதலருடன் மாயமாகிய 16 வயது மாணவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.மெக்சிகோவிலேயே இவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.மெக்சிகோ அதிகாரிகள் அவர்களை தடுத்து வைத்து, பின்னர் புளோரிடாவுக்கு கொண்டு வந்துள்ளனர்.எமி என்ற குறித்த மாணவி தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.மேலும், அவர் சிறந்த ஆரோக்கியத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சந்தேகநபர் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான முன்னைய செய்தி:
தன்னைவிட சுமார் 30 வயது அதிகமான நபருடன் மாயமாகியுள்ள 16 வயது மாணவியை எலன்டவுன் பொலிஸார் தேடிவருகின்றனர்.எமி யு என்ற பென்சில்வேனிய ‘ Lehigh Valley Academy’ பாடசாலை மாணவி, 45 வயதான கெவின் ஈஸ்டர்லி என்ற நபருடன் மாயமாகியுள்ளார்.
குறித்த நபர் எமியை சுமார் 10 தடவைகள் பாடசாலையை விட்டு வெளியே அழைத்துச் சென்றுள்ளார். கடந்த நவம்பர் 13 ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி 9 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே அவர் மாணவியை அழைத்துச் சென்றுள்ளார்.
அவரை குறித்த மாணவி தனது சித்தப்பா என கல்லூரி ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளதாக தற்போது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கெவின் மீது தற்போது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.கெவினின் மகள் ஒருவருடன் எமி யு நண்பியென சுட்டிக்காட்டப்படுகின்றது.
எமி யுவின் கடவுச் சீட்டையும் காணவில்லையெனவும், அவர் பணத்துடனேயே வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மாணவியின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.