திடீர் சரிவை நோக்கி பேஸ்புக் நிறுவனம்….!!

சமூக வலைத்தளங்களின் ஜாம்பவானாக Facebook நிறுவனம் திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் இந்நிறுவனம் பாரிய பிரச்சினையொன்றுக்கு முகங்கொடுத்துள்ளது.

Facebook நிறுவனமானது ஒரே நாளில் தனது சந்தை மதிப்பில் 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான Cambridge Analitica அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக Facebook பயனாளர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த புகார் காரணமாக Facebook நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என கருதப்படுவதால், Facebook பங்குகளின் மதிப்புகள் சரியத் தொடங்கியுள்ளன. ஒரே நாளில் 7 விழுக்காடு அதாவது இந்திய மதிப்பில் 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும் பேஸ்புக் பங்குகளின் மதிப்பு சரிந்துள்ளது.

அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் சூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு சுமார் 39 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.