மனித உடலில் குடல் முக்கிய பங்கை வகிக்கிறது. அதோடு குடல் மிகவும் முக்கிய செயல்பாட்டைச் செய்கிறது. அது தான் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றுவது. குடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உடலில் உள்ள டாக்ஸின்கள் அப்படியே தங்கி, அதுவே பல்வேறு தீவிர பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…
எனவே அவ்வப்போது குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது மலச்சிக்கலின் மூலம் நமக்கு அதை உணர்த்தும். அதோடு வேறு சில அறிகுறிகளின் மூலமும் குடல் சுத்தமாக இல்லை என்பதை வெளிக்காட்டும்.
இப்போது குடல் சுத்தமாக இல்லை என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகளையும், குடலை சுத்தம் செய்ய உதவும் அற்புத மருந்து குறித்தும் காண்போம்.
அறிகுறிகள்
மோசமான ஆரோக்கியம்
மனநிலை ஏற்றத்தாழ்வு
சரும அரிப்புக்கள்
மூட்டுக்கள் மற்றும் தசைகளில் வலி
சிறுநீர்ப்பையில் தொற்றுகள்
பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்
பதற்றம்
மன இறுக்கம்
மிகுந்த சோர்வு
மோசமான நினைவுத் திறன்
தேவையான பொருட்கள்:
ஆர்கானிக் மாப்பிள் சிரப் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
தண்ணீர் – 300 மிலி
தயாரிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
தயாரித்து வைத்துள்ள கலவையை சுமார் 10 நாட்களுக்கு, தினமும் 5-8 முறை உட்கொள்ள வேண்டும்.
கீழே குடலை சுத்தம் செய்து, சத்துக்களை முழுமையாக உறிஞ்ச உதவும் வேறொரு மருந்தும் கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
புதினா எண்ணெய் – 10 துளிகள்
எலுமிச்சை – 1
தண்ணீர் – 250 மிலி
தயாரிக்கும் முறை:
புதினா எண்ணெயை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து நன்கு கலந்து, இறுதியில் நீரை சேர்க்க வேண்டும். இதையும் 14 நாட்கள் தொடர்ந்து சிறிதாக எடுக்க வேண்டும். இதனால் நீங்கள் நிச்சயம் ஓர் அற்புதமான மாற்றத்தைக் காண்பீர்கள்