இலங்கை ஜனாதிபதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை ஒன்றை விதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இலங்கையின் மேற்கே கம்பஹா மாவட்டம் முத்துராஜவளை சரணாலயப் பகுதியில் கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஜனாதிபதி இந்த தடையினை விதித்துள்ளார்.
இந்த தடை விதிக்கப்பட்ட தகவலை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.குறித்த பகுதியில் 400 ஏக்கர் காணி கட்டிட நிர்மாணத்துக்காக வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததையடுத்து இன்று அதிகாலை அந்தப் பகுதிக்கு சென்ற ஜனாதிபதி கண்காணிப்பில் ஈடுபட்டதாக கூறபட்டுள்ளது.
இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும்வகையில் இந்த உத்தரவை செயற்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு விடுத்திருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.