விசேட நீதிமன்றம் அமைக்காவிடின் சர்வதேச நியாயாதிக்கத்தை நாடுவோம் ஹுசைன் இலங்­கைக்கு எச்­ச­ரிக்கை!

சர்­வதேச பங்­க­ளிப்­புடன் விசேட நீதி­மன்றம் ஒன்றை நிறுவி மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும். இந்த நட­வ­டிக்கை முன்னெ­டுக் கப்­ப­டா­விடின் சர்­வ­தேச நியா­யா­திக் கம் என்ற மாற்­று­வ­ழியை ஆரா­யு­மாறு உறுப்­பு­நா­டு­களை கோருவோம்  என்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசென் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் அண்­மையில் இலங்­கையில் இடம்­பெற்ற சிறு­பான்மை மக்கள் மீதான இன ரீதி­யான தாக்­குதல் குறித்து நாம் கவலை அடை­கிறோம் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நேற்று நடை­பெற்ற இலங்கை ஜெனிவா பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது என்­பது குறித்த விவா­தத்­தின்­போது செய்ட் அல் ஹுசேன் வெளி­யிட்ட அறிக்­கை­யி­லேயே இந்த விட­யங்­களை குறிப்­பிட்­டுள்ளார்.

செய்ட் அல் ஹுசேன் நேற்­றைய விவா­தத்தில் கலந்­து­கொள்­ளாத நிலையில் பிரதி மனித உரிமை ஆணை­யாளர் அறிக்­கையை வெ ளியிட்டார்.

2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்­புக்­குள்­ளான பிரேரணையை இலங்கை அர­சாங்கம் எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேனின் அறிக்கை மீதான விவா­தமே இவ்­வாறு நடை­பெற்­றது.

ஐக்­கிய நாடு­களின் பிரதி மனித உரிமை ஆணை­யாளர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

ஐக்­கிய நாடுகள் சபை­யுடன் ஈடு­பாட்­டுடன் செயற்­படும் இலங்­கையின் செயற்­பாட்டை வர­வேற்­கின்றோம். எனினும் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுப்­பதில் இலங்கை தாம­தத்தை கடை­பி­டிக்­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

மேலும் எதிர்­வரும் 2019 ஆம் ஆண்­டுக்குள் ஜெனிவா பிரே­ர­ணையை இலங்கை முழு­மை­யாக அமுல்­ப­டுத்தும் என்­பது சந்­தே­கத்­துக்கு உரி­ய­தாக மாறி­யுள்­ளது.

அத்­துடன் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்டு 20 மாதங்கள் கடந்தே காணாமல் போனோர் அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டுள்­ளமை குறித்தும் அதி­ருப்­தி­ய­டை­கின்றோம்.

அத்­துடன் காணி­களை மீள் வழங்­கு­வதில் தாமதம் நீடிக்­கின்­றது. காணி­களை தொடர்ந்து அப­க­ரித்தால் நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பு­வது கடி­ன­மாகும். மேலும் காணி­க­ளுக்­கான நட்ட ஈடுகள் சுயா­தீன பொறி­மு­றைகள் ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

இவ்­வா­றி­ருக்க சர்­வ­தேச மனித உரிமை மீறல்கள் அத்­துடன் சர்­வ­தேச மனி­தா­பி­மான மீறல்கள் போன்­ற­வற்­றுக்­கெ­தி­ராக தண்­டனை வழங்­காமல் இருக்கும் கலா­சாரம் நிறுத்­தப்­பட வேண்டும்.

அத்­துடன் சர்­வசே பங்­க­ளிப்­புடன் விசேட நீதி­மன்றம் ஒன்றை நிறுவி இவ்­வி­ட­யங்­களை ஆராய வேண்டும். இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டா­விடின் சர்­வ­தேச நியா­யா­திக்கம் என்ற மாற்­று­வ­ழியை ஆரா­யு­மாறு உறுப்­பு­நா­டு­களை கோருவோம்.

அத்­துடன் அண்­மையில் இலங்­கையில் இடம்­பெற்ற சிறு­பான்மை மக்கள் மீதான இன ரீதி­யான தாக்­குதல் குறித்து நாம் கவலை அடை­கிறோம்.

கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்க?ளுக்கு எதி­ரான தாக்­கு­த­லினால் 12நாட்க?ளுக்கு அவ­ச­ர­கால நிலையை கொண்டு வர நேர்ந்தது. சித்திவரதைகள் தொடர்வதாகவும் மனித உரிமை காப்பாளர்களை கண்காணிப்பது தொடர்பாகவும் அறிக்கையிடப்படுகிறது.

எப்படியும் இலங்கையின் இந்த நிலைமை தொடர்பிலும் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் குறித்தும் ஐ.நா. மனித உரிமை பேரவை அவதானத்துடவன் இருக்க வேண்டும் என கோருகிறோம்.