ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மட்டும் தங்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தால், அதை அவ்வளவு எளிதில் மறக்காமல் இருப்பதுடன், மன்னிக்கவும் மாட்டார்களாம்.
அந்த குணம் கொண்ட ராசிக்காரர்கள் யாரென்று பார்க்கலாம் வாங்க…
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களிடம் அதிக பிடிவாத குணம் இருக்குமாம். அதனால் இவர்களிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால், அவ்வளவு எளிதில் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.
ஆனால் இந்த ராசிக்காரர்கள் யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவும் மாட்டார்கள். தனக்கு யாரேனும் தீங்கு விளைவித்திருந்தால், அவர்களை பழி வாங்க வேண்டும் என்று நினைக்கவும் மாட்டார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களும் அவ்வளவு எளிதில் மற்றவர்களை மன்னிக்க மாட்டார்கள். இவர்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தால், இவர்களது குணம் இப்படி தான் இருக்கும் என்று நினைத்து, அவர்களது பழக்கத்தையே விட்டு விடுவார்கள்.
அதோடு இந்த ராசிக்காரர்கள் முடிந்த அளவு பிரச்சனையை பெரிதாக்குவார்கள். அதுவும் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால் கூட, காதில் விழாதவர்கள் போன்று பிரச்சனையை பெரிதாக்க நினைப்பார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு யாரேனும் ஏதேனும் கெடுதல் செய்தாலோ அல்லது துரோகம் செய்தாலோ, அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.
எனவே இந்த ராசிக்காரர்களின் நண்பர்கள் அல்லது விருப்பமானவர்கள் சற்று கவனமாக நடந்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் வெறும் மன்னிப்பை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. இவர்கள் சிறிய விடயங்களையும் தேவைகளையும் விட தனிப்பட்ட முறையில் எடுக்க முனைவார்கள்.
இந்த ராசிக்காரர்கள் போட்ட திட்டத்தை யாரேனும் தடை செய்தாலோ அல்லது முக்கியமான விடயங்களை இவர்களிடம் சொல்வதற்கு மறந்தாலோ, இவர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மன்னித்தது போன்று நடிப்பார்களே தவிர, உண்மையில் இவர்கள் மனதளவில் தனக்கு துரோகம் செய்தவர்களை மன்னிக்க மாட்டார்கள்.
இந்த ராசிக்காரர்களிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால், அவர்கள் செய்த தவறைச் சொல்லி காட்டி, எவ்வளவுக்கு எவ்வளவு பேசி மனதை காயப்படுத்த முடியுமோ, அவ்வளவு புண்படுத்தி, அவர்களை தலைகுனியச் செய்து விடுவார்கள்.