உப்பு கலந்த நீரில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இதை கொண்டு தினமும் வாயை கொப்பளித்து வந்தால் வாயில் வரும் பல்வேறு நோய்களை தடுக்க முடியும்.
உப்பு நீரை தயாரிக்கும் முறை?
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து நன்கு கரையும் வரை கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த உப்பு கலந்த நீரை வாய் முழுவதும் ஊற்றி, மேல் நோக்கிப் பார்த்து, உப்பு நீரானது தொண்டையில் படும்படி 30 நொடிகள் கொப்பளித்து, துப்ப வேண்டும்.
இப்படி ஒரு கப் நீர் முழுவதும் காலியாகும் வரை தொடர்ந்து வாயை கொப்பளிக்க வேண்டும்.
அதுவும் ஒவ்வொரு 4 மணிநேரத்திற்கும் ஒருமுறை உப்பு நீரால் வாயைக் கொப்பளித்தால், வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.
நன்மைகள்
- வாய் மற்றும் தொண்டையில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை பெருகச் செய்து, தேவையற்ற பாக்டீரியாக்களின் தேக்கத்தைத் தடுத்து, தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
- ஒவ்வொரு முறையும் இருமும் போது சளி வெளியில் வந்தால், அதற்கு உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
- சுவாசப் பாதையில் உள்ள அழற்சியைக் குறைத்து, தொண்டையில் உள்ள வலியில் இருந்தும் உடனடி நிவாரணம் அளிக்கிறது.
- சுவாச பாதையில் உள்ள பாக்டீரியா அல்லது வைரஸ்களையும் வெளியேற்றி,வறட்டு இருமலைத் தடுக்க உதவுகிறது.
- தினமும் மூன்று முறை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் மேல் சுவாச மண்டலத்தில் உள்ள நோய்த்தொற்றுக்களின் அபாயம் குறையும்.
- கடுமையான துர்நாற்றம் உள்ளவர்கள் தினமும் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, அந்நீரால் வாயைக் கொப்பளித்து வந்தால் துர்நாற்றம் போய்விடும்.
- பற்களைத் துலக்கும் போது, ஈறுகளில் இருந்து ரத்தக்கசிவு வருவது போன்ற ஈறு தொடர்பான பிரச்சனைகள் வராது.
- வாயில் உள்ள மிகச்சிறிய புண்கள் மிகவும் கடுமையான வலியை உண்டாக்கும். இந்த புண்களை குணமாக்குகிறது.