கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் பதற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து விமான நிலைய பாதுகாப்பு பிரிவு பிரதானியை இன்று காலை சிறைப்பிடித்துள்ளனர்.

பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் 36 பேரை திடீரென இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு பாதுகாப்பு பிரிவு பிரதானி சுற்றிவளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலைய விமான சேவை பாதுகாப்பு பிரிவின் 09 குழுக்களின் 36 அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்.

இதன் காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய சுதந்திர சேவை சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து விமான நிலைய பாதுகாப்பு பிரிவு பிரதானி மார்ஷல் சம்பத் விதானவை பாதுகாப்பு பிரிவின் நிர்வாக கட்டடத்திற்குள் வைத்து சிறைப்பிடித்துள்ளனர்.

இந்த நிலமையை தொடர்ந்து விமான நிலைய தலைவர் சமன் எதிரிவீர சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன், பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தரும் வரை பாதுகாப்பு பிரிவு பிரதானி மார்ஷல் சம்பத் விதானவை தற்காலிகமாக அந்தப் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.