சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களே ஒன்றிணைந்து போராடுவோம்!

சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களே! ஜாதி பேதமின்றி உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்து போராடுவோம் என வவுனியாவின் முக்கிய இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.