இந்தியாவில் பாம்பாட்டி ஒருவரை மலைப்பாம்பு ஒன்று கழுத்தை நெறுக்கியதால் அவர் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் Mau பகுதியில் கடந்த 20-ஆம் திகதி பாம்பாட்டி ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் மலைப்பாம்பை வைத்து சாகசம் காட்டி வந்தார்.
அப்போது பாம்பை தன் கழுத்தில் போட்டுக் கொண்டு, அங்கிருந்த மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் எதிர்பாரதவிதமாக பாம்பானது அவரின் கழுத்தை தன்னுடைய உடலை வைத்து நெறுக்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பாம்பிடமிருந்து மீள்வதற்காக போராடிய போது, அது விடாத காரணத்தினால் சுயநினைவற்றது போன்று கீழே விழுந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு துடி துடித்தார்.
அங்கிருந்த மக்களோ இது நடிப்பு என்று நினைத்து வீடியோ எடுத்துள்ளனர். வெகுநேரமாகியும் பாம்பாட்டி எழும்பாத காரணத்தினால் இரண்டு பேர் வந்து அவரை எழுப்பியது, பாம்பு நன்றாக பிடித்திருந்தது தெரியவந்தது.
அதன் பின் அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கிருக்கும் மருத்துவர்கள் இங்கு சிகிச்சையளிக்க முடியாது என்று வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
உயிருக்கு போராடி வரும், அவரின் நிலைமை தற்போது என்ன ஆனது? என்பது குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.