விளையாட்டு வினையானதால் அக்காவை சுட்டுக் கொன்ற தம்பி!!

அமெரிக்காவில் 9 வயது சிறுவன் ஒருவன் தனது அக்காவை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Mississippi மாகாணத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது :- 9 வயது சிறுவன் தனது 13 வயது சகோதரியுடன் கணணி விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்துள்ளான்.

விளையாட்டின் போது அந்த கணிணி விளையாட்டால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சிறுவன் தனது பெற்றோரின் படுக்கையறையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சகோதரியை சுட்டுள்ளான்.

துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து பொலிசார் தெரிவிக்கும் போது; குறித்த சிறுவன் மீது இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கும் பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளின் கண்ணில் படாதவாறு அவற்றை பேண வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.