29 வருடங்களாகத் தனித்தீவில் வசித்து வரும் மொயுரோ என்பவருக்கு புதிதாக தீவில் தங்குவது குறித்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது.ஹோர்சிகா மற்றும் ஷர்டினிஜா ஆகிய 2 தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள தீவுதான் புடெல்லியின் தீவு. இத் தீவில் 50 வயதாக இருக்கும் போது, மொயுரோ என்பவர் தனது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கரையொதுங்கியுள்ளார்.ஆனால், தீவை பார்த்ததும் அதனது அழகில் கடந்த 29 வருடங்களாக அங்கு தங்கியுள்ளார். இந்நிலையில் மொயுரோ அந்த தீவில் உள்ள அழகை, புகைப்படங்களாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றியுள்ளார்.இதனால், அதனை பார்த்த பலர் இங்கு சுற்றுலா வந்து செல்ல ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக அரசு இந்த தீவில் பூங்கா ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது. இதனால் தொடர்ந்து மொயுரோ இத் தீவில் தங்குவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.