அமெரிக்காவின் மேரிலேன்ட் ஆளுநர் தேர்தலில் இலங்கை வம்சாவளி தமிழ்பெண் இம்முறை போட்டியிடுகிறார்.கிரிஷாந்தி விக்னராஜா என்ற இந்த இலங்கை வம்சாவளி பெண் ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமாவின கொள்கைப்பிரிவு பணிப்பாளராக பணியாற்றினார்.கிரிஷாந்தி விக்னராஜா இலங்கையில் இருந்து 9 மாத குழந்தையாக அமெரிக்காவில் தமது பெற்றோருடன் குடியேறினார்.இந்த நிலையில், அமெரிக்காவின் மேரிலேன்ட் ஆளுநர் தேர்தலில் இம்முறை அவர் போட்டியிடுகிறார்.நான் ஒரு தாய். நான் ஒரு பெண், நான் உங்களின் அடுத்த ஆளுநராக வரவேண்டும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, மேரிலேன்ட்டின் வாக்காளர்கள் இம்முறை பெண் ஒருவரை ஆளுநராக தெரிவுசெய்யவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.கிரிஷாந்தி விக்னராஜா, மேரிலாந்து ஆளுநருக்கான போட்டியில் நுழைவதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிவிப்புகளை வெளியிட்டு பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.
37 வயதான கிரிஷாந்தி விக்கினராஜா கடந்த ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது அவரது பாரியாரான முதல் பெண்மணி மிச்ஷேல் ஒபாமாவின் கொள்கை இயக்குனராகவும், வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் மாநில செயலாளர் ஜோன் கெரி ஆகியோரின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார் என்பதும் இங்கே கோடிட்டுக் காட்டக்கூடிய விடயங்களாகும்.