சளிப்பிரச்சனையால் தவிரத்த பச்சிளம் குழந்தைக்கு இரும்பு தடியால் சூடு வைத்த சாமியார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ராமகேரா கிராமத்தைச் சேர்ந்த உதைலால் என்பவரின் 4 மாத பெண் குழந்தை சளிப்பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளது.
இதனால், உள்ளூர் சாமியாரிடம் குழந்தையை கொண்டு போட் காட்டியுள்ளார்கள். குழந்தைக்கு நிமோனியா இருப்பதாக கூறிய சாமியார், இரும்பு தடியால் குழந்தையின் வயிற்றில் சூடு வைத்து, இனிமேல் சளிப்பிரச்சனை வராது என கூறி அனுப்பியுள்ளார்.
ஆனால், குழந்தைக்கு சளியின் தாக்கம் தீவிரமடையே, உடனே பில்வாராவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், நிமோனியா இருப்பதை உறுதி செய்தனர்.
மேலும் இதயத்தில் பிரச்சனை இருப்பதாகவும் தெரிவித்தனர். உடல்நிலை மோசமடைந்ததால் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.