பிரான்சில் புதிய சட்டம் அமுல்!

பிரான்சில் இனி தெருக்களில் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுபவர் மீது சம்பவயிடத்திலேயே அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை அமுல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இது பாலியல் தொடர்பான கொடூர தாக்குதல்களை கட்டுப்படுத்தும் என அதிகாரிகள் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குறித்த மசோதாவை பொலிசாரே முன்மொழிந்துள்ளனர். இதில், மறுப்பு தெரிவித்த பின்னரும் பல முறை மொபைல் எண் கேட்டு தொல்லை தருவது உள்ளிட்டவையும் கட்டுக்குள் வரும் என பொலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த மசோதாவை 90 விழுக்காடு மக்கள் ஆதரித்துள்ளதாக ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய பாலியல் சமத்துவ அமைச்சர் Marlène Schiappa, பாலியல் ரீதியான சீண்டல்களில் இனி ஏற்படுபவர்களுக்கு சம்பவயிடத்திலேயே அபராதம் விதிக்கப்படும்.

அபராத தொகை 90 யூரோ தொடங்கி 750 யூரோ வரை இருக்கும். அபராதம் விதிக்கப்படும் நபர் தொடர்ந்து அதே குற்றத்தை செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டால் அவருக்கு மேலதிக அபராதம் விதிக்கப்படும் என்றார்.

ஆனால் குறித்த சட்டத்திற்கு ஒரு சாரார் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்பவர்கள் அதே இடத்தில் தண்டனை கிடைக்கும் வரை தங்குவதில்லை.

மேலும் இதுபோன்ற சட்டங்கள் பிரான்சின் தனித்துவம்மிக்க காதல் விளையாட்டுகளை கட்டுப்படுத்தும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.