கோட்டயத்தை சேர்ந்த மாதவன் நாயர், மீனாட்சி தம்பதிகளுக்கு 1936-ல் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு திருமணம் முடிந்து 82 ஆண்டுகள் ஆகின்றது.
மாதவன் நாயருக்கு 100 வயதும், மீனாட்சிக்கு 99 வயதும் ஆகிறது. இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.
இவர்கள் சமீபத்தில் தங்கள் திருமணத்தின் 82-ஆவது ஆண்டு விழாவை தங்களின் வாரிசுகள், பேரன், பேத்திகள் மற்றும் கொள்ளு பேரப் பிள்ளைகளின் முன்னிலையில் கொண்டாடியுள்ளனர்.
சிறு வயதில் இருந்தே இந்த தம்பதிகள் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தவர்களாம். அதன் பின் வேறு வேறு பள்ளிகளில் படிப்பை தொடர்ந்துள்ளனர்.
இவர்கள் வளர்ந்ததும் இருவீட்டு பெரியவர்களும் பேசி நிச்சயித்து திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் அது காதல் திருமணம் இல்லை.
நாயர் தேசிய கட்சி ஒன்றின் தீவிர தொண்டராக இருந்தவர். இவருக்கு முழுநேர வேலையும் அதுவே.
அதனால் இவருக்கு அழைப்பு வந்துக் கொண்டே இருப்பதால் சிறிது நேரம் கூட விட்டில் இருக்க மாட்டாராம்.
ஆனால் இப்போது நாயர் வீட்டில் கைத்தடி உதவியுடன் முற்றத்தில் நடப்பார், நானும் நடப்பேன்.
அவர் அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவார். நானும் எழுந்து விடுவேன். காலையில் சாயா குடித்த பின் 8 மணிக்குள் காலை உணவையும் சாப்பிட்டு முடித்து விடுவோம்.
மதியம் சாப்பாடு, மாலையில் பால் சேர்க்காத தேநீர். இரவு கஞ்சி சாப்பிட்டு விட்டு ஒன்பதரை மணிக்குள் உறங்கி விடுவோம்.
எந்த பிரச்சனையையும் பெரிதாக எடுத்துக் கொண்டு மனதை வருத்திக் கொள்ள மாட்டோம்.
நாயருக்கு 3 முறை மாரடைப்பு வந்து போனது. அதற்காக சீரகம் அல்லது மல்லி விதை போட்டு காய்ச்சிய நீரை தினமும் குடித்து வருகின்றோம்.
இது தான் எங்கள் ஆயுளின் ரகசியம் என்று மீனாட்சி-நாயர் தம்பதிகள் கூறியுள்ளனர்.