கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஆதிரா(22) என்பவர் டயாலிஸ் மையத்தில் பணியாற்றி வருகிறார்.
ஆதிரா, தாழ்ந்த சாதியை சேர்ந்த இராணுவ வீரரை காதலித்து வந்துள்ளார். இதனால் ஆதிராவின் தந்தை ராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், தந்தையின் எதிர்ப்பை மீறி , காதலனுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.
இவர்களுக்கு இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில், ஓடிப்போன மகளிடம் சென்று, நானே உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறேன் எனக்கூறி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் ராஜன்.
வீட்டுக்கு வந்த அவர், இந்த திருமணத்தை நிறுத்திவிடலாம், அந்த மாப்பிள்ளை வேண்டாம் என சண்டைபோட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் அதிகரிக்கவே, அருகில் இருந்த கத்தியை எடுத்து ஆதிராவை குத்த முயன்றபோது, அவர் தப்பி அருகில் உள்ள வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இருப்பினும் பின்தொடர்ந்து வந்த ராஜன், தனது மகளின் நெஞ்சில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஆதிராவை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து ராஜனை பொலிசார் கைது செய்துள்ளனர்.