யாழ்ப்பாணம் சாவகச்சேரி பஸ் நிலையத்தில் நின்ற இளைஞன் மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இச்சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் சாவகச்சேரி பஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.இதில், வடமராட்சியைச் சேர்ந்த இளைஞனே படுகாயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.வடமராட்சியை சேர்ந்த குறித்த நபர் சாவகச்சேரி நீதிமன்றத்தில் உள்ள வழக்கொன்றுக்காக வருகைதந்துவிட்டு பஸ் நிலையத்தில் நின்ற போதே கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
இவரைக் கத்தியால் குத்திய வவுனியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.தனது மனைவியுடன் குறித்த இளைஞர் தொடர்பு வைத்திருந்ததாலேயே கத்தியால் குத்தியதாக பொலிஸில் சரணடைந்த குடும்பஸ்தர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.