குழந்தையுடன் தூக்கில் தொங்கிய கணவனைக் கண்டு மனைவியும் தற்கொலை முயற்சி!!

தமிழ்நாட்டில் கணவர் ஒருவர் தனது குழந்தையுடன் தூக்கில் தொங்கிய நிலையில், அவர் மனைவியும் தற்கொலைக்கு முயன்ற துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.திருச்சியில் உள்ள சிண்டிகேட் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்த ராமசுப்பிரமணியன் என்பவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்று மதியம் பள்ளியில் யூகேஜி பயிலும் மகள் ஆருத்ராவை ராமசுப்பிரமணியன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அப்போது வெளியில் சென்றிருந்த ராமசுப்ரமணியனின் மனைவி ஆவுடையம்மாள் வீட்டுக்குள் நுழைந்த போது கணவரும், குழந்தையும் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, ஆவுடையம்மாள் மருத்துவமனை முன்பு வாகனங்கள் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயல அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வரும் நிலையில், ராமசுப்ரமணியன் சில நிறுவனங்களுக்கு வரம்புமீறி கடன் கொடுத்ததால் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.