பாதாமும் நஞ்சு தான் அளவுக்கு மீறிச் சாப்பிட்டால்!

பாதாம் பருப்பு என்பது ஊட்டச்சத்து நிறைந்த ஒன்றாகும். விட்டமின் ஈ, கல்சியம், பொஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், நியாசின் செம்பு மற்றும் செலனியம் போன்றவை பாதாமில் அடங்கியுள்ளன.எனினும், பாதாமை அளவோடுதான் சாப்பிடவேண்டும். உடலுக்கு நன்மை சேர்க்கிறது என்பதற்காக அளவுக்கு மீறி சாப்பிட்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.நம் உடலுக்கு சராசரியாக 15 மில்லி கிராம் விட்டமின் ஈ சத்து தேவைப்படுகிறது. ஆனால் ஒரு கப் பாதாமில் 25 மில்லி கிராம் விட்டமின் ஈ உள்ளடங்கியுள்ளது.அதனால், அளவுக்கு அதிகமாக பாதாம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதுபோல் தினமும் உடலுக்கு 10 மில்லி கிராம் மெக்னீசியம் போதுமானது.ஆனால், பாதாமில் மெக்னீசியத்தின் அளவு அதிகம் என்பதால், அளவுக்கு மீறி சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதிக பாதாம் சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்சினையையும் உருவாகும்.பாதாமுடன் காரமான உணவு பதார்த்தங்களை சேர்த்து சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் உடலில் நச்சுத்தன்மை உண்டாக வாய்ப்பிருக்கிறது.பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு காலையில் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான், முழுமையான ஆரோக்கிய பலனை அனுபவிக்க முடியும். எனவே தினமும் 6 பாதாம்கள் போதுமானது.