கோடீஸ்வர இளைஞர் ஒருவர் தனது இல்லற வாழ்வை தொலைத்து, ஜைன மத துறவியாக மாறவுள்ளார்.இந்தியாவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் மொக்சேஷ் ஷா(24). இவர் சி.ஏ முடித்து விட்டு, மகாராஷ்டிர மாநிலம் கோல்காபூர் பகுதியில் தொழில் செய்து வருகிறார்.இவரது ஆண்டு வருமானம் ரூ.100 கோடியை தாண்டுகிறது. இவர் தனது இல்லற வாழ்வில் இருந்து, விலகிச் செல்ல முடிவு செய்துள்ளார்.எனவே, வரும் ஏப்ரல் 20ஆம் திகதி ஜைன மதத் துறவியாக மாற இருப்பதாக முறைப்படி அறிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ஏப்ரல் 19ஆம் திகதி தொடங்குகின்றது.
முதன் முதலாக அவரது குடும்பத்தில் இருந்து துறவியாகும் நபர் மொக்சேஷ் ஷா ஆவார். இது தொடர்பாக பேசியுள்ள அவர் பணத்தால் எதையும் வாங்க முடிந்தால் அனைத்து பணக்காரர்களும் மகிழ்ச்சியாக இருப்பர்.
ஆனால், உள்ளார்ந்த மகிழ்ச்சி வேண்டுமென்றால் எதையும் பெறக்கூடாது. ஏதாவது ஒன்றை இழக்க வேண்டும். கடந்த ஆண்டே துறவியாக மாற விரும்பினேன். ஆனால், இந்த ஆண்டு மாற பெற்றோர்கள் வலியுறுத்தினர். எனவே இந்தாண்டு துறவியாகவுள்ளேன் என்றார். மோட்சம் என்பது மிகச் சிறந்த ஒன்று, அதேசமயம் பிறருடைய வாழ்க்கைக்கும் நாம் உதவி செய்ய வேண்டும் எனவும் அந்த இளம் தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.