தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தின் பேரணாம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நிலநடுக்கம் காரணமாக வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இன்று காலை 7.05 மணிக்கு 2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதலில் இலேசான அதிர்வு உணரப்பட்ட போதிலும், இரண்டாவது முறை பாரிய சத்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நிலநடுக்கத்தை தொடர்ந்து அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடியதாகவும், நில நடுக்கத்தால் பொது மக்கள் அச்சத்துடன் உள்ளனர் எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.